கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது.
பெங்களூரு:
1,116 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 64 ஆயிரத்து 83 ஆக உள்ளது. மேலும் 8 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 537 ஆக உள்ளது. நேற்று 970 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்து 10 ஆயிரத்து 626 ஆக உள்ளது. 15 ஆயிரத்து 892 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
திடீர் அதிகரிப்பு
பெங்களூரு நகரில் 462 பேர், தட்சிண கன்னடாவில் 102 பேர், உடுப்பியில் 89 பேர், ஹாசனில் 81 பேர், மைசூருவில் 76 பேர், குடகில் 67 பேர், துமகூருவில் 60 பேர் உள்பட 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பெங்களூரு நகரில் 5 பேர், தட்சிண கன்னடா, துமகூரு, உடுப்பியில் தலா ஒருவர் என 8 பேர் இறந்தனர். 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story