தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டு ஜெயில்-சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டு ஜெயில்-சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 4:02 AM IST (Updated: 16 Sept 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தந்தை- மகனுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்:
தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் தந்தை- மகனுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நகை பறிப்பு
சேலம் அஸ்தம்பட்டி வங்கி தெருவை சேர்ந்தவர் ஜனத்சித்ரா. தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. இவர், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி அஸ்தம்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் ஜனத்சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 50), அவருடைய மகன் ஜெகதீஸ் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
10 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சாலையில் நடந்து சென்ற ஜனத்சித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்து சென்ற கணேசன், அவருடைய மகன் ஜெகதீஸ் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Next Story