கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 16 Sept 2021 5:41 AM IST (Updated: 16 Sept 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருட முயன்றனர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் நடமாட்டம் இருப்பதை கண்டு அவர்கள் திருடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து காரில் தப்ப முயன்றனர்.

போலீசார் துரத்துவதை அறிநந்து காரில் இருந்த 3 பேரும் காரை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் அந்த காரை கைப்பற்றினர்.

போலீஸ் விசாரணையில் மர்ம நபர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒருவித எண்ணெய் போன்ற பொருளை தெளித்து விட்டது தெரியவந்தது. இதனால் அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா படப்பதிவு காட்சிகளை போலீசாரால் தெளிவாக பெற இயலவில்லை. அதே சமயத்தில் அருகே உள்ள துணிக்கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.போலீசாரின் பிடியில் சிக்கிய அந்த காரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த கையுறை உள்பட பல பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக ஒரு சிலரை தனிப்படை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story