கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி கொலை - 2 பேர் கைது


கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி கொலை - 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2021 5:46 AM IST (Updated: 16 Sept 2021 5:46 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கு கவுசல்யா (43) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை ஓபசமுத்திரம் கிராம தைலமரத்தோப்பையொட்டிய மீன் மார்க்கெட் சாலையில் ஆறுமுகம் பிணமாக கிடந்தார். சிமெண்டு கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு கல்லை அங்கேயே வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆறுமுகத்துடன் சேர்ந்து கிளிஞ்சல் தொழிற்சாலையில் தங்கி கூலி வேலை செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தேசிங்கு (45), முத்து (42) ஆகியோர் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த ஆரம்பாக்கம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story