சென்னை அரசு காப்பகத்தில் 6 சிறுவர்கள் மாயம்
சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சமூக நல பாதுகாப்பு துறையின் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி உள்ளனர்.
பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து வழி தெரியாமல் சுற்றியவர்கள், கொத்தடிமைகளாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களை மீட்டு இங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் அரசு காப்பகத்தில் தங்கி இருந்த 6 சிறுவர்கள் நேற்று முன்தினம் முதல் மாயமாகி விட்டனர். இதுகுறித்து காசிமேடு போலீஸ் நிலையத்தில் காப்பாகத்தின் மேலாளர் சுரேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர், அரசு காப்பாகத்தில் மொத்தம் உள்ள 40 சிறுவர்களில் 6 பேரை காணவில்லை. இதில் 5 பேர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் தாம்பரத்தைச் சேர்ந்தவர். அனைவரும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். மாயமான சிறுவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறி இருந்தார்.
Related Tags :
Next Story