கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள அப்பனேரி பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா போராட்ட குழு துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ் தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமை யிடமாக கொண்டு தனி யூனியன் அமைக்க கோரியும், தற்போது தென்காசி மாவட்டத்துடன் வைத்து கொண்டு தேர்தல் நடத்துவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ண ன், தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தேசிய ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, உரிமை மீட்பு குழு செயலாளர் ராம்தாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story