குலசேகரன்பட்டினத்தில் தீக்குளித்து பெண் சாவு
குலசேகரன்பட்டினத்தில் பெண் தீக்குளித்து இறந்து போனார்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முப்பிடாதி அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கும் இவரது உறவினர் பெண் முருகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். முத்துசாமி குலசேகரன்பட்டினத்தில் ஒர்ஷாப் வைத்து தொழில் செய்து வருகிறார். முருகேஸ்வரி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த முருகேஸ்வரி மண்ணெண்ணைைய உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் அவர் இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் லெட்சுமி அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story