தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை


தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
x
தினத்தந்தி 16 Sept 2021 8:26 PM IST (Updated: 16 Sept 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உலா வந்த சிறுத்தை, காவலுக்காக இருந்த வளர்ப்பு நாயை வாயில் கவ்வியப்படி அங்கிருந்து இழுத்து சென்றது.

 நாய் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் நாயை சிறுத்தை கவ்விச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் ஊருக்குள் புகும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story