கோத்தகிரியில் கடைவீதியில் உலா வந்த கரடி
கோத்தகிரியில் கடைவீதியில் உலா வந்த கரடி
கோத்தகிரி
கோத்தகிரி நகரில் பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மாதா கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவிகளை கரடி துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல அதிகாலை நேரங்களில் கரடி ஒன்று கடைவீதி, பள்ளிவாசல் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் கரடி ஒன்று உலா வந்தது.
இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story