குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை


குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை
x
தினத்தந்தி 16 Sept 2021 8:26 PM IST (Updated: 16 Sept 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

குன்னூர்

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

குன்னூர் அருகே கரோலினா குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

 கரோலினா குடியிருப்பு வனப்பகுதியை ஓட்டி உள்ளதால் அடிக்கடி காட்டெருமை, கரடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் கரோலினா குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டமும் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாய்கள் காணாமல் போனது. இதனால் சிறுத்தைதான் நாய்களை பிடித்து சென்றிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.

பொதுமக்கள் பீதி

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு சாந்தி என்பவருடைய வீட்டில் கேட்டை தாண்டி குதித்த சிறுத்தை வளர்ப்பு நாயை பிடிக்க முயன்றது. அப்போது நாய்கள் குரைத்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டூத்தீபோல பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story