நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2021 8:26 PM IST (Updated: 16 Sept 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர்

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே உள்ள ஓனிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் எருமாடு பகுதிக்கு வந்து செல்ல பயன்படுத்தும் நடைபாதை பல இடங்களில் உடைந்து மோசமாக உள்ளது. சில இடங்களில் மண் மூட்டைகளால் குழிகளை மூடியுள்ளனர்.

 தற்போது தொடர் மழை பெய்து வருவதால் மூட்டையில் இருந்து மண் அரித்து செல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தவறி விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story