போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த வேண்டும்
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த வேண்டும்
கோவை
போலீஸ் -பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் உத்தரவிட்டார்.
கூடுதல் டி.ஜி.பி. ஆலோசனை
தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் தாமரைக்கண்ணன்.
இவர் நேற்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் தீபக் எம். தாமோர், துணை போலீஸ் கமிஷனர்கள் சுப்பிரமணியம், உமா மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் அவர், கோவை நகரில் போலீசாரின் பணி, குற்ற கண்டு பிடிப்பு சதவீதம், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு
கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் பேசியதாவது:-
அரசின் கொள்கையான போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீஸ்காரர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும்.
போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை களைய முடியும். போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அமைப்பு, சாதி, மத ரீதியான பிரச்சினைகளில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
கோவை நகர மக்கள் மரியாதைக்கு பெயர் பெற்றவர்கள். எனவே போலீசாரும் நகர மக்களிடம் மரியாதையுடனும், மென்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story