36 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


36 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sept 2021 9:24 PM IST (Updated: 16 Sept 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

36 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

திருப்பூர், 
திருப்பூர் மாவட்ட  உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர்  திருப்பூர் மாநகர பகுதிகளில் ஓட்டல்கள், உணவகங்கள், பிரியாணி கடை என மொத்தம் 25 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுத்தம், சுகாதாரம் பராமரிக்கப்படாத 17 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 5 கடைகளில் தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன நிலையில் இருந்த இறைச்சி 36 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மூடி வைக்காமல் திறந்த நிலையில் இருந்த உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இஞ்சி, பூண்டு மசாலா பேஸ்ட் 10 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story