திருப்பூரில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூரில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர்,
திருப்பூரில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை
திருப்பூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்வதும், பின்னர் வெளியில் அடிப்பதும் சீதோஷ்ண நிலை மாறிமாறி வருகிறது. இதனால் காலையில் வெயிலும், மாலையில் கடும் குளிரும் நிலவுகிறது. அதன்படி நேற்று காலை திருப்பூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய மழை மதியம் 2 மணி வரை பெய்தது. குறிப்பாக திருப்பூர் லட்சுமி நகர், கொங்கு மெயின் ரோடு, அரிசிக்கடை வீதி, ராயபுரம், அவினாசி ரோடு பகுதிகளில் மழை கொட்டியது. சுமார் ½ மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்தது.
வெள்ளம்
ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். குறைந்த நேரம் லட்சுமிநகர் மற்றும்அதை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்தால் அனைத்து மழை நீரும், இந்த ஒற்றைக்கண் பாலம் வழியாக செல்கிறது. அது மட்டுமல்ல மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் மழைநீர் கருப்பு நிறத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு வருகிறது.
மேலும் ஊத்துக்குளி சாலையில்செல்லும் வாகன ஓட்டிகள் இந்த ஒற்றைக்கண் பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் சக்கரம் மற்றும் என்ஜீன் சாக்கடைநீர் கலந்த மழை நீரில் மூழ்கி ஆப் ஆகி விடுகிறது. அப்போது வாகன ஓட்டிகள் அந்த கழிவு நீரில் வாகனத்துடன் நடந்து செல்லும் போது, கழிவு நீர் காலில் பட்டு சொரி மற்றும் இதர நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே மழை காலங்களில் இந்த ஒற்றைக்கண் பாலம் வழியாக செல்லும் மழை நீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story