மூலனூர் பகுதியில் ஆடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது


மூலனூர் பகுதியில் ஆடுகள் திருடிய  4 பேரை போலீசார் கைது
x
தினத்தந்தி 16 Sept 2021 9:46 PM IST (Updated: 16 Sept 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் பகுதியில் ஆடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது

மூலனூர், 
மூலனூர் பகுதியில் ஆடுகள் திருடிய  4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆடுகள் திருட்டு
 மூலனூர், குண்டடம் மற்றும் கன்னிவாடி பேரூராட்சி கிராம பகுதிகளில் தோட்டங்களில் வளர்க்கப்படும் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் திருடு போவதாக மூலனூர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் சாலைகளின் குறுக்கே இரவு நேரங்களில் சோதனை சாவடி அமைத்து போலீஸ் உதவியுடன் விவசாயிகள் கண்காணித்து வந்தனர். 
இந்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு  தனராசு மேற்பார்வையில் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டுகள்  மதியழகன், கார்த்திக், ராமர், ராமலிங்கம், கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்னர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார்  ஒட்டன்சத்திரம் எல்லைப்பகுதியில் இரவு பகலாக தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் வந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் ஆடுகளை சிலர் ஏற்றிக் கொண்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை  பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 
 4 பேர் கைது 
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பாரப்பட்டியை சேர்ந்த சதீஷ் குமார் (வயது 27), செல்வகுமார் (29), சடையாண்டி (31), முத்துராமன் (25)  ஆகிய நான்கு பேர்களும் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை இருசக்கர வாகனங்கள் மூலம் கடத்தி சென்று பிறகு  காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் சென்று அங்குள்ள கசாப்பு கடைகள் மற்றும் சந்தையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
 இதை அடுத்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் 4-பேரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர். இதில் அவர்களிடம் இருந்த 6 ஆட்டுக்குட்டிகள் மீட்கப்பட்டன மேலும் ஒரு கார், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து. அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story