தென்பெண்ணை ஆற்றில் ஆள்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆள்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பாகூர், செப்-
புதுச்சேரி நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிராம பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆறு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று காலை ராட்சத எந்திரம் ஒன்று அங்கு வந்து நின்றுள்ளது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அங்கு திரண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆழ்துளை அமைப்பதற்கான காரணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை.
இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாகனம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பாகூர் பகுதியில் ஏற்கனவே குடிநீரின் தரம் குறைந்துவிட்ட நிலையில், இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து, நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல அரசு முயற்சி செய்து வருகிறது. அப்படி செய்தால், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
Related Tags :
Next Story