படுத்துக்கொண்டு நிலக்கடலை சாப்பிட்டவர் சாவு - தொண்டையில் சிக்கியதால் பரிதாபம்
படுத்துக்கொண்டு சாப்பிட்டவர் தொண்டையில் நிலக்கடலை சிக்கியதால் பரிதாபம் உயிரிழந்தார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் கரண்சிங் (வயது 35). இவர் அதே பகுதியில் காவலாளியாக வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கரண்சிங் தனது வீட்டில் படுத்துக்கொண்டு நிலக்கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கியது.
இதனால் மூச்சுவிட திணறினார். சிறிதுநேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, கரண்சிங் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கரண்சிங் தந்தை தன்பகதூர் (73) கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story