சிக்கலில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சிக்கலில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2021 10:59 PM IST (Updated: 16 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி சிக்கலில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கல்:
டெல்லியில் பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி சிக்கலில், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
டெல்லி பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை ைகது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி நாகை அருகே சிக்கல் கடைத்தெருவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுபாதேவி தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அபுபக்கர் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா கலந்து கொண்டு பேசினார்.
 இதில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, சிறுபான்மை மக்கள் நல குழு நிர்வாகிகள் குமார், லெட்சுமிசுந்தர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
நிவாரணம்
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அனைத்து பணி இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு என பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். 
பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story