மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை + "||" + Near Tirukovilur Adolescent commits suicide by drinking alcohol

திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தேவி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34) தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்துப் போன அவரது மனைவி மகாலட்சுமி(30) கணவரிடம் கோபித்துக்கொண்டு கா.பாளையம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் வீட்டில் மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு அதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக  திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்யப்பட்டார்.
2. பள்ளி மாணவி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
காதலுக்கு உதவி செய்யாததால் தாக்கப்பட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. முதியவர் தற்கொலை
சேத்தூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.
5. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை