உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா


உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Sept 2021 11:24 PM IST (Updated: 16 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாடம் நடத்திய ஆசிரியர்கள் பெற்றோர் உள்பட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

உளுந்தூர்பேட்டை

கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து 20 மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் பள்ளிக்கூடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.. இதில் 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பரபரப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story