‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சாலையை ஆக்கிரமிக்கும் சந்தை
நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் வியாழக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். பள்ளப்பட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் பகவதி அம்மன் கோவில் அருகில் இருந்து கள்ளர் நடுநிலைப்பள்ளி வரை சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைத்து சந்தை நடக்கிறது. இதனால் சந்தை நடக்கும் நாளில் அந்த சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சந்தை நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவின்மிகல், பள்ளப்பட்டி.
முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார் தெரு, கருப்பணசாமி கோவில் தெரு ஆகிய தெருக்களில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் போதுமான அளவு தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. எனவே தினமும் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வி, திண்டுக்கல்.
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
நிலக்கோட்டை 4 ரோடு சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே 4 ரோடு பகுதியில் சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-விஜயகுமார், நிலக்கோட்டை.
பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்
தேனியை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாராம்மாள், முத்துதேவன்பட்டி.
Related Tags :
Next Story