4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 11:40 PM IST (Updated: 16 Sept 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை:
4 வயது குழந்தை
புதுக்கோட்டையை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை தினமும் மாலை நேரத்தில் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு திடலுக்கு குழந்தைகளுடன் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி அந்த குழந்தை வீட்டிற்கு அருகில் உள்ள விளையாட்டு திடலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாலன்நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 65) என்பவர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
இதுகுறித்து குழந்தையின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
6 ஆண்டு சிறை
புகாரின் பேரில் போலீசார் ராமச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். 
அதில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக புலன் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் கவிதா, நீதிமன்ற போலீஸ் கார்த்திகா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

Next Story