பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ வழக்கு


பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை;  அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ வழக்கு
x
தினத்தந்தி 16 Sept 2021 11:44 PM IST (Updated: 16 Sept 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி.

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்று வீடு திரும்புவது வழக்கம்.
வழக்கமாக அவர் செல்லும் பஸ்சில் திருவாடி கிராமத்தை சேர்ந்த அய்யனார்(வயது 40) கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அய்யனார், அந்த 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

மிரட்டல்

சம்பவத்தன்று பள்ளி முடிந்து பஸ்சில் வீட்டிற்கு அந்த மாணவி திரும்பி இருக்கிறார். அப்போது மாணவியின் கையை பிடித்து, இலவச பஸ் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், அதில் தன்னுடைய ெசல்போன் நம்பரை எழுதி இரவு போன் செய்யுமாறு கூறி இருக்கிறார். போன் செய்யவில்லை என்றால் வீடு புகுந்து உன்னை தூக்கிச் சென்றுவிடுவேன் என்று மிரட்டியதாக ெதரிகிறது.
இதனால் பயந்து போன அந்த மாணவி அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்தார். அவருடைய பெற்றோர், ‘எதற்கு பள்ளி செல்லவில்லை’ என மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த தொல்லையை கூறி இருக்கிறார்.

போக்சோ சட்டம்

இதையடுத்து மாணவியின் பெற்றோர், சத்திரக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அரசு பஸ் கண்டக்டர் அய்யனார் மீது போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் இளவரசு போக்ேசா சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story