காரையூர், புதுமாங்குடி, அஞ்சுபுளிப்பட்டியில் விநாயகர், சாத்தையனார்கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


காரையூர், புதுமாங்குடி, அஞ்சுபுளிப்பட்டியில் விநாயகர், சாத்தையனார்கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 16 Sep 2021 6:14 PM GMT (Updated: 16 Sep 2021 6:14 PM GMT)

விநாயகர், சாத்தையனார்கோவில்களில் கும்பாபிஷேகம் றடைபெற்றது.

காரையூர்:
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காரையூர் வட்டார மருத்துவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே உள்ள புதுமாங்குடி சாத்தையனார் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் சாத்தையனார் மூலஸ்தான விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அம்பலக்காரர்கள், கோவில் குடிமக்கள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். 
பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டி செல்வவிநாயகர் கோவில், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி வந்து விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கல்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஆலவயல் வேட்டைக்காரசுவாமி கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.

Next Story