ஆடு திருடு போனதை விசாரிக்க சென்றபோது வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு


ஆடு திருடு போனதை விசாரிக்க சென்றபோது வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sept 2021 11:47 PM IST (Updated: 16 Sept 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருமயம்:
பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவன் (வயது 25). இவரது 5 ஆடுகள் திருட்டு போய் இருந்தன. இதையடுத்து அவர், சந்தேகத்தின் பேரில் ஆடு திருடு போனது பற்றி திருமயம் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி, கோபிநாத் செவலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன், கார்த்திக் ஆகியோரிடம் விசாரித்துள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி உள்பட 4 பேரும், கங்காதேவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த் கங்காதேவன் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கங்காதேவன் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் கங்காதேவனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story