ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2-வது நாளில் 9 பேர் வேட்புமனு தாக்கல்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2-வது நாளில் 9 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 16 Sept 2021 11:57 PM IST (Updated: 16 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலியிடங்களுக்கான தேர்தலில் 2-வது நாளில் 9 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை:
ஊரக உள்ளாட்சி
தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6-ந் தேதியும் மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் காலி இடங்களுக்கு அக்டோபர் 9-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தலா ஒரு இடத்திற்கும், 5 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும், ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் 41 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
9 பேர் மனு தாக்கல் 
முதல் நாளில் 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளில் கீழப்பனையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், அறந்தாங்கி ஒன்றியத்தில் அத்தானி ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ராஜேந்திரபுரம் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், தாந்தாணி ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், மணமேல்குடி ஒன்றியத்தில் இடையாத்தூர் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், விராலிமலை ஒன்றியத்தில் ராஜாளிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், திருவரங்குளம் ஒன்றியம், குலமங்கலம் தெற்கு 9-வது வார்டு கவுன்சிலர் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story