பாலவிடுதி தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்


பாலவிடுதி தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2021 12:17 AM IST (Updated: 17 Sept 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய பாலவிடுதி தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வெள்ளியணை,
கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் மயில்வாகனன். இவர் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்தப்பகுதி விவசாயி ஒருவரிடம் செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்பிரிவு காவலர் மயில்வாகனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story