ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டம்


ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2021 12:22 AM IST (Updated: 17 Sept 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு

நெல்லை மாநகரில் முக்கிய இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் ஸ்டாண்டு அமைத்து தங்களது ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை அழைத்துச்செல்கிறார்கள். மாநகரின் வளர்ச்சியால் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நெல்லை டவுனில் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் அதிகமான ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, ஒரு நேரத்தில் 5 ஆட்டோக்களை மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர்.

டிரைவர்கள் முற்றுகை

இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். இதில் ஆட்டோ கூட்டமைப்பு தலைவர் சூர்யா பாலு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ஈஸ்வர மூர்த்தி, முருகன், சுடலைமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போலீசார், ஆட்டோ டிரைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அதிகபட்சமாக 7 ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள் 10 ஆட்டோக்களை நிறுத்த அனுமதி கேட்டனர். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Next Story