திருவாரூரில் மனித சங்கிலி போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
திருவாரூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மனித சங்கிலி போராட்டம்
பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும்.
சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.ஐ.ஏ. அலுவலகத்தை மூட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கோஷங்கள்
போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் அரசு தாயுமானவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story