வாலிபர் கொலையில் 3 பேர் கைது
அம்பை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பை:
அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் கீழத் தெருவை சேர்ந்த இசக்கி பாண்டி மகன் தங்கப்பாண்டி (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்களால் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரம்மதேச கீழத் தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் பேச்சிமுத்து (29), மாரிசாமி மகன் ஆறுமுகம் என்ற ஹரி (20) மற்றும் அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுபீஷ் (20) ஆகிய 3 பேரை அம்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story