மாவட்ட செய்திகள்

7 பவுன் நகை பறிப்பு + "||" + Jewelry flush

7 பவுன் நகை பறிப்பு

7 பவுன் நகை பறிப்பு
திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவருடைய மனைவி ரேவதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு வந்த சித்தியை புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டிக்கு மொபட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி ரோட்டில் வந்தபோது, சாத்தியனேந்தல் கண்மாய்கரை ரோட்டில் இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து ரேவதியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து ரேவதி கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் துணை சூப்பிரண்டு, ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
4. மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மதுரை உத்தங்குடியில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.