துணைவேந்தர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள்


துணைவேந்தர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 17 Sept 2021 1:24 AM IST (Updated: 17 Sept 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

விடுதியில் உணவு வழங்கப்படாததை கண்டித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்:
விடுதியில் உணவு வழங்கப்படாததை கண்டித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் மாணவ, மாணவிகள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் விடுதி உள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் விடுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உணவு வழங்கப்படவில்லை. விடுதியில் தங்கி இருக்கும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் கேட்ட போது போதிய மாணவர்கள் இல்லாததால், உணவு சமைத்து வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூப்படுகிறது.
துணைவேந்தரிடம் முறையீடு
இதையடுத்து நேற்று விடுதி மாணவர்கள், துணைவேந்தரிடம் முறையிடுவதற்காக அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் மாணவர்கள் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனை சந்தித்து முறையிட்டனர். மேலும் தங்களுக்கு விடுதியில் உணவு சமைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.
மாணவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், விடுதியில் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story