மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா


மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Sept 2021 1:53 AM IST (Updated: 17 Sept 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
கொரோனா பரவல் குறைந்ததை தொடா்ந்து, அரசின் உத்தரவின்படி 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் சோர்வும், அதிக காய்ச்சலும் இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மாணவருக்கும், பள்ளியில் அவருடன் படிக்கும் 67 மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று உறுதியானது. பரிசோதனை முடிவில் மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர், தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவர் படித்த வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளும் தொடர்ந்து நடந்தன. மேலும் அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அரியலூர் நகரில் ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும், பிளஸ்-2 மாணவிக்கும், வரதராஜன்பேட்டையில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 4 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story