மாவட்ட செய்திகள்

2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு + "||" + One candidate each for 2 Panchayat Ward member posts

2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு

2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு
2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அரியலூர்:

தற்செயல் தேர்தல்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறப்பு, ராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெறவுள்ளது.
இதில் அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன.
2 பேர் வேட்புமனு தாக்கல்
தற்செயல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று அரியலூர் மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் 2-வது நாளான நேற்று செந்துறை ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், சிறுகடம்பூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி
9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது.
2. 3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
3 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
3. ஐகோர்ட்டு உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை தி.மு.க. அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் முறையாக கடைபிடிக்காமல் தி.மு.க. அரசின் கைப்பாவையாக இருந்தது என்று தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்.
5. இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.