மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது + "||" + 10th class sub-examination started

10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது

10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது
பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்கியது.
பெரம்பலூர்:
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பிற்கான துணை தேர்வு தமிழகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று நடந்தது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 77 ஆண்களும், 53 பெண்களும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆண்களும், 5 பெண்களும் என மொத்தம் 142 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 66 ஆண்களும், 49 பெண்களும் என 115 பேர் தமிழ் தேர்வினை எழுத வந்திருந்தனர். 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. வேப்பூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 12 பேரும் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழ் தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. 10-ம் வகுப்பு துணை தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகிற 20-ந்தேதி ஆங்கில தேர்வு நடைபெறவுள்ளது. வருகிற 28-ந்தேதியுடன் 10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு நடந்தது.
2. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள், துணை தலைவராக வக்கீல் தங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
3. 4 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு
4 ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
4. ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சம வாக்குகள் பெற்ற 4 வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வருகிற 16 ந் தேதி தேர்வு
ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சம வாக்குகள் பெற்ற 4 வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வருகிற 16 ந் தேதி தேர்வு
5. 836 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு
கடந்த ஆண்டு அறிவிக் கப்பட்ட 836 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.