‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sept 2021 2:19 AM IST (Updated: 17 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வெறிநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், தொட்டியம், பாலசமுத்திரம், காமராஜர்  சாலையில் வெறிநாய் மற்றும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மேற்கண்ட சாலைகளில் செல்ல மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சண்முகம், பாலசமுத்திரம், திருச்சி.
கோவிலை புனரமைக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மருவத்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளதால் முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயப்பன், பெரம்பலூர்
சாக்கடையில் தேங்கி நிற்கும் குப்பைகள்
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா நகரில் பல மாதங்களாக சாக்கடையில்  குப்பை தேங்கி அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், திருச்சி.
பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
கரூரில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் அரசு பஸ் இரவு 12.30 மணிக்கு தரகம்பட்டிக்கு வரும். இந்த பஸ் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் கொரோனா முடிந்தும் இந்த பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கரூருக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்தினாசலம், தரகம்பட்டி, கரூர்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
திருச்சி  மாவட்டம்  திருவெறும்பூர் ஒன்றியம்  நவல்பட்டு, அண்ணா நகர், கும்பக்குடி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன், திருச்சி.
குளம் தூர் வாரப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, அழியாநிலை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களின் தண்ணீர் பிரச்சினைக்காகவும், ஆடு, மாடுகளின் தாகம் தணிக்கவும் சித்தாலங்குடி குளத்தை தூர்வாரி மக்களின் துயர் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்கரவர்த்தி, புதுக்கோட்டை.
மரத்தை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா நெய்வேலி கிராமத்தில் கடைவீதி அருகே உள்ள பாடமாத்தி பகுதியில் இருக்கும் அரச மரம் பலத்த காற்று காரணமாக முறிந்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அகற்றாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இதனை அகற்ற வேண்டும்.
சூர்யா, முசிறி, திருச்சி.
மின்கம்பம் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தேரடி பகுதியில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றியமைத்திட வேண்டும்.
சீனிவாசன், புதுக்கோட்டை.
சாக்கடையில் அடைப்பு
ராயனூர் நேதாஜி நகரில் உள்ள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்த சாக்கடை சென்று சேரும் மெயின் சாக்கடை அடைத்து உள்ளது. அதையும் சுத்தம் செய்து சாக்கடை கழிவுநீர் தேங்காமல் செல்லும் அளவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேந்திரன், கரூர்.
தண்ணீர் தொட்டி பழுது
திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர் வார்டு எண் 14-ல் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியானது உடைந்து  மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல், திருச்சி.

Next Story