மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்
டெல்லியைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நகர தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி பேசும்போது, இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், கொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி மரணத்திற்கு நீதி வேண்டும், கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story