மேலும் 2 பேர் வேட்புமனு தாக்கல்
மேலும் 2 பேர் வேட்புமனு தாக்கல்
நாகர்கோவில்:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதே போல குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், மகாராஜபுரம் பஞ்சாயத்து 2-வது வார்டு, லீபுரம் பஞ்சாயத்து 4-வது வார்டு, பறக்கை பஞ்சாயத்து 8-வது வார்டு, வெள்ளிச்சந்தை பஞ்சாயத்து 3-வது வார்டு, ஆத்திவிளை பஞ்சாயத்து 3-வது வார்டு, திக்கணங்கோடு பஞ்சாயத்து 6-வது வார்டு, குமரங்குடி பஞ்சாயத்து 1-வது வார்டு, சூழால் பஞ்சாயத்து 1-வது வார்டு, வெள்ளாங்கோடு பஞ்சாயத்து 5-வது வார்டு ஆகிய 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் 2-வது நாளான நேற்று 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது பறக்கை பஞ்சாயத்து 8-வது வார்டுக்கு ஒருவரும், வெள்ளிச்சந்தை பஞ்சாயத்து 3-வது வார்டுக்கு ஒருவரும் என மொத்தம் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்றும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.
Related Tags :
Next Story