கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்


கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sept 2021 2:31 AM IST (Updated: 17 Sept 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

காரியாபட்டி
நரிக்குடி அருகே புல்வாய்க்கரை பகுதியில் புல்வாய்க்கரை கிராம நிர்வாக அதிகாரி ராஜகுரு மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்ற போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை செய்தபோது உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்ததுள்ளது தெரியவந்தது. பின்னர் இரண்டு லாரிகளின் டிரைவர்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த லாரியின் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கிராம நிர்வாக அதிகாரி ராஜகுரு, 2 லாரிகளை பறிமுதல் செய்து அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story