நகை திருட்டு
பெண்ணிடம் 10 பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருமங்கலம்,
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி ஜெயசுதா (வயது 36). இவர் தனது சித்தி மகள் திருமணத்திற்காக திருமங்கலம் வந்து திருமங்கலத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது திருமங்கலம் தேவர் சிலை அருகே 3 பெண்கள் ஏறியுள்ளனர். மூன்று பெண்களில் ஒரு பெண் நெஞ்சு வலிப்பது போல் ஜெயசுதா அருகில் அமர்ந்து கையில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடி கொண்டு கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார். சிறிது தூரம் சென்றவுடன் பையை பார்த்த ஜெயசுதா நகை காணாமல்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story