நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்


நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்
x
தினத்தந்தி 17 Sept 2021 4:12 AM IST (Updated: 17 Sept 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மல்லியக்கரை, தும்பல்
வாழப்பாடி தெற்கு உபகோட்டம் மல்லியக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல மதியம் 2 மணி வரை மல்லியக்கரை, கருத்தராஜபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமிபுதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துருட்டி, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் உபகோட்டம் தும்பல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டி புதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவல்களை வாழப்பாடி மின் வினியோக செயற்பொறியாளர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
வேம்படிதாளம், மல்லூர்
வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், நடுவனேரி, மேட்டுக்காடு, கவுண்டனேரி, கோட்டமேடு, எர்னபுரம், மகுடஞ்சாவடி, அழகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோல் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பொன்பாரப்பட்டி, ஏ.ஜி.பாளையம், வெள்ளைபிள்ளையார் கோவில், நரிக்கல்காடு, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், வெட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story