2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகர் பகுதியில் மதுபான கடைகள் முன்பு மதுகுடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை முன்பு சிலர் மது அருந்துவதாக புகார் வந்தது. இதையடுத்து மதுபான கடை முன்பு மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சங்கர் ஆகிய 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story