சாராய கடையை மூட வேண்டும்


சாராய கடையை மூட வேண்டும்
x
தினத்தந்தி 17 Sept 2021 5:34 PM IST (Updated: 17 Sept 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

ஆங்குணம் கிராமத்தில் சாராய கடையை மூட ேவண்டும் என்று கலெக்டரிடம் பெண் கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்தார்.

திருவண்ணாமலை

ஆங்குணம் கிராமத்தில் சாராய கடையை மூட ேவண்டும் என்று கலெக்டரிடம் பெண் கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்தார். 

திருவண்ணாமலை அருகில் உள்ள ஆங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு 2 வயது மற்றும் 4 வயதில் என 2 பெண் குழந்தைகள் உள்ளது. 

இந்த நிலையில் இன்று  ரூபா தனது குழந்தைகளுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் முருகேசிடம் ஆங்குணம் கிராமத்தில் ஊருக்குள் உள்ள சாராயக்கடையை மூட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். 

அந்த மனுவில், எனது கணவர் சென்னையில் லாரி ஓட்டி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து நாங்கள் சொந்த ஊரான ஆங்குணம் கிராமத்திற்கு வந்தோம். 

அந்த நாளில் இருந்து ஆங்குணம் கிராமத்தில் உள்ள சாராயக்கடையில் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேலாக சாராயம் வாங்கி குடித்து விட்டு வருகிறார். 

இதனால் என் குடும்பத்தில் பல பிரச்சினைகளும், சண்டைகளும் வருகிறது. மேலும் என் கணவரின் உடல் மெலிந்தும் அவரின் சுயநினைவுகள் இல்லாமலும் தன்னுடைய வண்டி ஓட்டி சம்பாதிக்கும் தொழிலையும் செய்ய முடியாமலும் இருக்கிறார். 

எனவே எங்கள் ஊரில் உள்ள சாராயக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story