பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைப்பு


பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைப்பு
x
தினத்தந்தி 17 Sep 2021 12:25 PM GMT (Updated: 17 Sep 2021 12:25 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை மாவட்ட எல்லை மற்றும் ஆந்திர எல்லையோரம் கூடுதல் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். திருமண மண்டபங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 

அனுமதி இல்லாமல் திருமண மண்டபங்களை வாடகைக்கு விட கூடாது. பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களிலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பொருட்கள் பறிமுதல்

இந்த பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முதல் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க முக்கிய சாலை சந்திப்புகளில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வது குறித்து பொதுமக்கள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தில் பேனர் வைக்க கூடாது. அனுமதி இல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. 

சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது. அதிக கூட்டம் கூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story