மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2021 6:00 PM IST (Updated: 17 Sept 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 பேர் கைது

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே  நெமிலி போலீசார் நேற்று காலை மணல் கடத்தல் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் பனப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பனப்பாக்கம் புது தெருவை சேர்ந்த மணி (வயது 62), கல்பலாம்பட்டு ரோட்டு தெருவை சேர்ந்த லோகநாதன் (42) என்பது தெரியவந்தது. 

அவர்கள் அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததால்  இதுதொடர்பாக நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்கு பதிவு செய்து மணி, லோகநாதன் ஆ௳ிய இவருவரையும் கைது செய்தார். மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story