தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2021 6:45 PM IST (Updated: 17 Sept 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தபால் துறையில் புதிய கணக்குகள் தொடங்க வரைமுறையற்ற இலக்கை நிர்ணயம் செய்து ஊழியர்களை நிர்ப்பந்தம் செய்வதாக, தபால் துறை அதிகாரிகளை கண்டித்து தூத்துக்குடி கோட்ட தபால் ஊழியர்கள் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு எழுத்தர் சங்க தலைவர் மைக்கேல், தபால்காரர் சங்க தலைவர் இளங்கோவன், கிராமப்புற ஊழியர் சங்க செயலாளர் ராமசந்திரன், ஆர்.எம்.எஸ்.ஊழியர் சங்க செயலர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். எழுத்தர் சங்க செயலர் மனோகர் தேவராஜன், தபால்காரர் சங்க செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் கமிட்டி அமைப்பாளர் மெரிட்டா மற்றும் தபால் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story