நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8800 பேர் வாக்களிக்க உள்ளனர்.


நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8800 பேர் வாக்களிக்க உள்ளனர்.
x
தினத்தந்தி 17 Sept 2021 8:41 PM IST (Updated: 17 Sept 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8,800 பேர் வாக்களிக்க உள்ளனர். 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8,800 பேர் வாக்களிக்க உள்ளனர். 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

13 வாக்குச்சாவடிகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் 3 பேர் உயிரிழந்ததால், அந்த இடங்கள் காலியாக உள்ளது. 2 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட 3 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சியில் (வார்டு எண் 4) 6 வாக்குச்சாவடிகள், சேரங்கோடு ஊராட்சியில் (வார்டு எண் 11) 6 வாக்குச்சாவடிகள், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் (வார்டு எண் 6) ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

8,800 பேர் 

மசினகுடி ஊராட்சியில் 1,813 ஆண் வாக்காளர்கள், 1,973 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 786 பேரும், சேரங்கோடு ஊராட்சியில் 2,254 ஆண்கள், 2,309 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 563 பேரும், நடுஹட்டி ஊராட்சியில் 225 ஆண்கள், 226 பெண்கள் என மொத்தம் 451 வாக்காளர்கள் இருக்கின்றனர். 

நீலகிரியில் நடக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 8,800 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதால் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

ஆய்வு 

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர் கள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 

13 வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story