குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2021 9:45 PM IST (Updated: 17 Sept 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
ஏரல் அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்த ஐசக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் (வயது 39). இவரை கடந்த 18.8.2021 அன்று முன்விரோதம் காரமாணமாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் அகரம் பகுதியில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், ஜெகன், மாரிமுத்து, ரூபன் தேவபிச்சை, பெனித் நியூட்டன் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Next Story