போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு


போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Sept 2021 9:48 PM IST (Updated: 17 Sept 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் குழுவினர் மேலதட்டப்பாறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு அந்த பகுதியை சேர்ந்த சந்திரா (வயது 51) என்பவர் எந்த வித மருத்துவ படிப்பும் படிக்காமல், வீட்டில் ஆஸ்பத்திரி போன்று வைத்து பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தாராம். அவர் அலோபதி மாத்திரைகளையும் வழங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து இணை இயக்குனர் முருகவேல் தட்டப்பாறை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் தட்டப்பாறை போலீசார், சந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story