பசுமாட்டின் காதுகள் வாலை அறுத்து துண்டிப்பு
கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பசுமாட்டின் காதுகள்- வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
மாட்டின் காதுகள், வால் அறுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது51). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த 5 பேர் அந்தமாட்டை பிடித்து கீழே தள்ளினர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வாலை அறுத்து துண்டித்தனர். மேலும் மாட்டை விரட்டி அடித்தனர். அப்போது அந்த மாட்டின் காதுகள், வாலில் ரத்தம் வெளியேறியது. இதனை பார்த்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
5 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து அண்ணாதுரை கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசு மாட்டின் இரண்டு காதுகளையும், வாலையும் அறுத்து துண்டித்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். காயமடைந்த பசுமாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்து வருகிறார். பசுமாட்டின் காதுகள், வாலை அறுத்து துண்டித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story